இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வ்தேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு போராடவேண்டிய இலக்கை நிர்ணயித்துள்ளது. 249 என்ற ஓட்ட இலக்கை இந்த மைதானத்தில் இரண்டாவதாக துடுப்பாடி பெறுவது இலகுவானதல்ல. ஆனால் நிதானமாக போராடி பெற வேண்டும். இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை பலமாக நீண்டதாக காணப்படுவதனால் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்ட பர்வேஸ் ஹொசைன் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தௌஹித் ரிதோய் 51 ஓட்டங்கள். ஜேக்கர் அலி 24 ஓட்டங்களையும், ஷமீம் ஹொசைன் 22 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக 30 ஓட்டங்கள் பெறப்பட்டன. ரன்சிம் ஹசன் அதிரடியாக துடுப்பாடி 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவரின் துடுப்பாட்டம் மூலம் போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பங்களாதேஷ் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ விக்கெட்களை கைப்பற்றினார். வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்களையும், டுஸ்மாந்த சமீர, சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இலங்கை அணி சார்பாக இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன மிலான் ரத்நாயக்க, எஷான் மாலிங்க ஆகியோர் நீக்கப்பட்டு டுனித் வெள்ளாளகே, டுஸ்மாந்த சமீர ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக லிட்டோன் டாஸ், டஸ்கின் அஹமட் ஆகியோர் நீக்கப்பட்டு ஷமிம் ஹொசைன், ஹசன் மஹ்முட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம்
பங்களாதேஷ்
டன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, ஷமிம் ஹொசைன், தௌவ்ஹித் ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், ஜேக்கர் அலி, ரன்சிம் ஹசன், ஹசன் மஹ்மூத், தன்வீர் இஸ்லாம், முஸ்டபைசூர் ரஹ்மான்
நிஷான் மதுஷ்க, பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், கமிந்து மென்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியனகே, டுனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ