இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் மரியா திரிபோடி இன்று (03.09) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவர் எதிர்வரும் 5ம் திகதிவரை நாட்டில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இத்தாலிய வெளியுறவு துணை அமைச்சர் அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட பல பிரமுகர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.