மெக்சிகோவின் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவராகக் கருதப்பட்ட “எல் மேன்சோ” (நெமேசியோ ஒசெகுரா) ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜாலிஸ்கோ குற்றச் சங்கத்தின் தலைவரான அவரை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட அவரை பற்றிய தகவலுக்கு அமெரிக்க அரசு முன்பு 15 மில்லியன் டாலர் பரிசு அறிவித்திருந்தது.
இந்த நடவடிக்கை அமெரிக்க புலனாய்வு துறையின் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஏற்பட்ட மோதல்களில் நான்கு கும்பல் உறுப்பினர்கள் உயிரிழந்ததுடன் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.