லிட்ரோ எரிவாயு தொடர்பில் புதிய அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (23.02) முதல் சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகம் வந்தடைந்ததுடன், தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அத்துடன் எதிர்வரும் 25 மற்றும் 28ம் திகதிகளில் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இன்று முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் கொள்கலன்கள் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், சந்தையில் நிலவும் தட்டுப்பாடு விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நாட்களில் ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசைகள் காரணமாக எழுந்த நெருக்கடி நிலை இவ்விநியோகத்தின் மூலம் சீராகும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Social Share

Leave a Reply