இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை நிறைவு செய்து நேற்று (20.02) இரவு நாடு திரும்பினார்.
செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட AI Impact Summit 2026 மாநாடு அரச தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தொழில்நுட்ப பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் நடைபெற்றதோடு கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
19 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச தலைவர்களுக்கான அமர்வில் உரையாற்றியதோடு, மனித குலத்தின் கலாசார விழுமியங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கருத்து வெளியிட்டார்.
அத்தோடு மாநாட்டின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron , பிரேசில் ஜனாதிபதி Lula da Silva, அபூதாபி முடிக்குரிய இளவரசர் Khaled bin Mohamed bin Zayed Al Nahyan மற்றும் பூட்டான் பிரதமர் Tshering Tobgay ஆகிய அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (20) நடைபெற்றது.
இதேவேளை, இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான விசேட பிரதிநிதியும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவருமான Sergio Gor உடனான சந்திப்பிலும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.