சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்கியவர்களை உட்சேர்த்து சிகின ஸ்ரீலங்கா (Sihina Sri Lanka) திட்டமானது பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் நா. மதிவண்ணன் தலைமையில் (25.02) ஆம் திகதி பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்கியவர்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் உடல் மற்றும் உள ரீதியான ஆற்றுப்படுத்தல்களை மேம்படுத்தி எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்குவது இதன் முக்கியமான ஒரு நோக்கமாக காணப்படுகிறது.
இதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், மாற்றுத்திறனாளிகள் ஒரு இயலாமை என்பது அது உடலில் அங்கங்களில் உள்ள ஒரு சிறிய குறைபாடு அல்லாமல் அவர்கள் இயலாதவர்கள் இல்லை என்பதையும் அவர்களால் மற்ற மனிதர்களை விட வேகமாக செயல்பட முடியும் எனவும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களை நிரூபிக்கக் கூடிய சந்தர்ப்பமாக இதனை கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கி அவர்களை சமுதாய மட்டத்தில் இணைப்பதன் ஊடாக மென்மேலும் அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி மேலும் சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளையும் சாதாரணமான மட்டத்துக்கு கொண்டு வரலாம் எனவும் அவர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் தொழில் நிலையங்களுக்கு செல்லும்போது ஏற்படுகின்ற சவால்கள் அதனை அவர்கள் எவ்வாறு வெற்றி கொண்டார்கள் மற்றும் தொழில் தருனருக்கு தொழில் வழங்கும் போது ஏற்படுகின்ற சவால்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உளரீதியாக திருப்திப்படுத்தக் கூடிய விளையாட்டுகள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பனவும் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்வினை திருகோணமலை மாவட்டத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் சிறப்பாக ஒழுங்கமைத்ததாக திருகோணமலை மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.