50க்கும் மேற்பட்ட லெபனான் நகரங்களை விட்டு மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் வெளியிட்ட அவசர வெளியேற்ற அறிவிப்பில், குறித்த நகரங்களில் வசிக்கும் மக்கள் குறைந்தது 1,000 மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பான இடங்களுக்கு நகர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கும், காமெனியை குறிவைத்து நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் Hezbollah அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல், தனது பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு அமைப்பும் அல்லது தரப்பும் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளது.