தீவிரமடையும் டெங்கு பரவல்!

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், டெங்கு நோயால் இதுவரை 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாவும், அதனைத் தொடர்ந்து காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடருமானால் உடனடியாக வைத்தியரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply