இன்றும் பல விமானங்கள் ரத்து!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்நிலை காரணமாக, கட்டுநாயக்க விமனநிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த 57 விமான சேவைகள் இன்று (03.03) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டிலிருந்து புறப்படவிருந்த 28 விமானங்களும், இலங்கைக்கு வரவிருந்த 29 விமானங்களும் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், நாளை (04.03) நடைபெறவிருந்த 4 விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கும் அங்கிருந்து இலங்கைக்கும் இடையே இயக்கப்படும் விமானங்கள் மட்டுமன்றி, அந்தப் பிராந்தியத்தின் வழியாக பிற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்கெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, இன்று அதிகாலை சில விமானங்கள் மட்டும் அந்தப் பிராந்தியத்தின் வழியாக பயணம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply