உலக எண்ணெய் நெருக்கடி-அவசர கையிருப்பை பயன்படுத்த தயாராகும் அமெரிக்கா!

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

இந்த நிலையை சமாளிக்க அமெரிக்கா தனது அவசரகால கையிருப்பு எண்ணெயை பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாற்று நடவடிக்கையாக வெனிசுலா நாட்டின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதையும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply