மத்திய கிழக்கில் சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்திருந்த இலங்கையர்கள் நால்வரும் தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு நலமாக மீண்டு வருவதாக வெளிநாட்டு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் மூவருடன் தொலைபேசி மூலம் பேசியதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். நான்காவது நபரின் தொடர்பு கிடைக்காத நிலையிலும், அவர் கூட பாதுகாப்பாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், நிலைமையை தூதரகங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவைத்துள்ளார்.