ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று (09) பிற்பகல் கூடவுள்ளது.
ட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு கூடவுள்ளது.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில், அரசியல் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.