ஆளில்லா வானூர்தியின் பாகங்கள் விழுந்து ஓமானில் இருவர் பலி!

ஓமானின் சோஹார் மாகாணத்தில் ஒரு ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதன் பாகங்கள் விழுந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஓமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்புத் துறை ஆதாரத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், அல்-அவாஹி பகுதியில் இந்த வானூர்தி வீழ்ந்தது, இதில் இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்றும், மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும், சோஹார் மாகாணத்தில் மற்றுமொரு ஆளில்லா வானூர்தியும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply