சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.