டீசல் விலை உயர்வால் பேருந்துக் கட்டணங்களில் கணிசமான மாற்றம்!

இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்ததன் காரணமாக, தற்போதைய பேருந்துக் கட்டணங்கள் 10%-க்கும் மேலாக உயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.289 இருந்து ரூ.382 ஆக (ரூ.93 உயர்வு) அதிகரித்துள்ளதால், கட்டண சூத்திரத்தின் அடிப்படையில் இந்த உயர்வு அவசியமானதாகியுள்ளது.

இதனையடுத்து, புதிய பேருந்துக் கட்டண உயர்வை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் இன்று (23.03) பெறப்பட உள்ளது.

Social Share

Leave a Reply