மேல், தென், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களும் அனுராதபுரம், மன்னார், வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சில அவசியமான விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நண்பகல் வேளையில் நேரடியாக வெயில் படும் இடங்களில் வேலை செய்வதைத் தவிர்த்து, முடிந்தவரை நிழலான இடங்களைத் தேர்வு செய்யுங்கள்.
மெல்லிய, தளர்வான மற்றும் பருத்தி (Cotton) உடைகளை அணிவது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும்.
வீடுகளில் உள்ள முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் அதிக வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்கள் மீது மேலதிக அவதானம் செலுத்துங்கள்.
தசைப்பிடிப்பு அல்லது அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக முதலுதவி பெறுவது அவசியம்.