ஈரானின் எந்த தீவையும் “எதிரிகள்” கைப்பற்ற முயன்றால், அந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் பிராந்திய நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது இடையறாத தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரானிய பாராளுமன்ற தலைவர் மொஹமட் பாகர் கலிபாஹ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவர் இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இத்தகைய முயற்சிகள் இடம்பெற்றால் இராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும் என்றும், எதிரிகளின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றநிலையின் மத்தியில் வெளியாகியுள்ளன.