பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி – பங்களாதேஷில் சம்பவம்!

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாக்காவை நோக்கி பயணித்த பேருந்து, தவுலத்தியா முனையத்தில் மிதவைப் பாலம் வழியாகச் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து பத்மா ஆற்றில் கவிழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தையடுத்து மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, விபத்திற்கான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Social Share

Leave a Reply