முன்னாள் அமைச்சர் கெஹெலியவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

2022 இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திலிருந்து நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் செய்ததால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரூ. 75 மில்லியன் தொகையை தனிப்பட்ட நிதியிலிருந்து அரசுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையதின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ். டி ஜெயரத்ன தலா ரூ. 50 மில்லியன் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply