எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் திரு.குமார ஜயக்கொடிக்கு எதிராக இன்று (27.03) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் குற்றச்சாட்டுகள் ஒப்படைக்கப்பட்டதுடன், முன்னர் வழங்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம், குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முன்னியாகியுள்ளார்.

குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவரை தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கவும், அவரது கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தில் பணிபுரிந்த போது கொள்வனவு நடவடிக்கையில் தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக இருந்து அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழு பிரதிவாதி மீது ‘ஊழல்’ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

Social Share

Leave a Reply