இந்தோனேஷியாவின் டெர்னேட் நகரக் கடற்கரை அருகிலுள்ள வட மொலுக்கா கடலில் இன்று (02.04) ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், இலங்கைக்கு எந்த அபாயமும் இல்லை எனவும் DMC உறுதி செய்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், சில பகுதிகளில் 75 செ.மீ. வரை அலைகள் பதிவாகியுள்ளன.
ஆரம்பத்தில் சுனாமி அபாயம் இருப்பதாக அறிவித்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC), பின்னர் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு அந்த எச்சரிக்கையை நீக்கியது.