கொஹுவல பொலிஸ் வரம்பிற்கு உட்பட்ட களுபோவில பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதியில் 2026 மார்ச் 23ம் திகதி, சீன பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மேல் மாகாண குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவினால் நேற்று (06.04) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் வரம்பிற்குட்பட்ட ஸ்ரீமத் அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு அன்றைய தினம் மதியம் அந்த ஹோட்டலை முற்றுகையிட்டு, சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது, சந்தேக நபரிடம் இருந்து 3 கமெராக்கள் மற்றும் ஐஸ் (மெத்தாம்பெட்டமின்) போதைப்பொருள் 2 கிராம் 280 மில்லிகிராம் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதான இந்த சந்தேக நபர், இன்று(06.04) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.