இன்று (06.04) முதல் லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
12.5 கிலோ சமையல் எரிவாயு ரூ. 775 அதிகரித்து புதிய விலை ரூ. 4,765 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 308 உயர்ந்து ரூ. 1,910 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோ சமையல் எரிவாயு ரூ. 140 உயர்ந்து ரூ. 890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் LP எரிவாயு விலை அதிகரித்ததும், இறக்குமதி செலவுகள் உயர்ந்ததும் காரணமாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், போதுமான எரிவாயு கையிருப்புகள் இருப்பதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இடையறாத விநியோகம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.