மகளின் ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிப்பாளரால் தாக்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதி!

15 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக கூறப்படும் மகளின் ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிப்பாளர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தாய் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

தனது மகளின் ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிப்பாளரால் தாம் தாக்கப்பட்டதில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Social Share

Leave a Reply