அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோ நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் மேற்கொண்டதாகவும், இது இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், 17 மற்றும் 18 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் தங்களையே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.