அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்த தடை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சகத்தின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், எதிர்வரும் 31ம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply