திஸ்ஸமஹாராம – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் உள்ள வெலிகந்த பகுதியில் சிறிய வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்றபோது, வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு லொறிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.