எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறை தொடரும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (19.05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் 2026 மார்ச் மாத நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், நுகர்வைக் கட்டுப்படுத்துவதையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டே QR முறை செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.