சட்டவிரோதமாக சகுரா என்ற யானைக்குட்டியை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து நீதவான் திலின கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் இன்று (16/12) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதற்கமைய நீதிபதி தமித் தொடவத்த இந்த உத்தரவை பிறப்பித்தார். பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை, மனுதாரர்களால் நிரூபிக்க முடியாது போனமையின் காரணமாக, திலின கமகேவ விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் ஏனைய மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பு சாட்சியத்தை விசாரணை செய்வதற்கு நீதிபதி தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார்.
