நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 15 நாட்களில் மட்டும் 4,091 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 26 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதெல்லாம் வாரத்திற்கு 1,800 வரையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், முன்னர் வாரத்திற்கு வெறும் 200 நோயளர்களே அடையாளம் காணப்பட்டு வந்ததாகவும் டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டம் டெங்கு நோய் அபாய வலயமாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
