தமிழ் – முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு கூட்டு செயற்பாட்டுக்கான முயற்சியின் கீழ், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான பொது ஆவணத்தில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று (21/12) இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பு – வெள்ளவத்தையில் அமைந்துள்ள குளோபல் டவரில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இதில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி விக்னேஸ்வரன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதின் எம்.பி, இராதாகிருஷ்ணன் எம்.பி, பழனி திகாம்பரம் எம்.பி, சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
