இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உவைஸ் மொஹமட்டை பதவி விலகுமாறு நேற்று (20/12) கோரிக்கை விடுத்ததற்கு அமைய, அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் உவைஸ் மொஹமட்டை பதவி விலக வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தான் இன்று குறித்த பதவியிலிருந்து விலகுவதாக உவைஸ் அறிவித்துள்ளார்.
