பால்மா விலையில் மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் எதிர்காலத்தில் பால்மா விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் களஞ்சியசாலைகளின் கட்டண அதிகரிப்பு போன்ற காரணங்களால் பால்மா இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
