20-20 உலக கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 20-20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணி நேரடியாக பங்குபற்ற முடியாது. தெரிவுகாண் போட்டிகளில் விளையாடி தகுதி பெற்றால் மட்டுமே இலங்கை அணி 20-20 உலககிண்ண தொடரில் விளையாட முடியும்.
அணியினை அறிவிப்பதற்கான இறுதி தினம் நேற்றாகும். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான முதற் போட்டி நிறுவைடைந்ததும் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா தொடரில் பங்குபற்றும் வீரர்கள் அநேகமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகேஷ் தீக்க்ஷன,கவிந்து மென்டிஸ் போன்றவர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
டினேஷ் சந்திமாலுக்கும் அணியில் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அதேவேளை, நுவான் பிரதீப் மேலதிக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியானது இதுவரையில் விளையாட்டுத்துறை அமைச்சரது அனுமதியினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்படும் அணிகள் யாவும் விளையாட்டு துறை அமைச்சரது அனுமதியை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 18 ஆம் திகதி இலங்கை அணி நபிபியா அணியுடனும், 20 ஆம் திகதி அயர்லாந்து அணியுடனும், 22 ஆம் திகதி நெதர்லாந்து அணியுடனும் தெரிவுகாண் போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்த அணிகளுடன் விளையாடி முதலிடத்தை பெற்றாலே இலங்கை அணி இறுதி சுற்றில் விளையாட முடியும்.
அணி விபரம் – தஸூன் சாணக்க, தனஞ்செய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித அசலங்க, கமின்டு மென்டிஸ், பானுக்க ராஜபக்ஷ, குசல் பெரேரா, டினேஷ் சந்திமால், வனிது ஹசரங்க, சமிக்க கருணாரட்ன, துஸ்மாந்த சமீர, அகில தனஞ்செய, மகேஷ் தீக்சன, பினுர பெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரம
மேலதிக வீரர்கள் – நுவான் பிரதீப்,புலின தரங்க, லஹிரு மதுசங்க, லஹிரு குமார