மத்திய வங்கி ஆளுனராக மீண்டும் அஜித் நிவாட் கப்ரால்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது அமைச்சு பதவியினையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கவே இராஜினாமா செய்கிறார்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் W.டி லக்ஷ்மன் 14 ஆம் திகதியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மனவருத்தத்தோடு தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளமை பின்புற அழுத்தங்கள் காரணமாக ஓய்வு பெறுகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் பன்னிரண்டாவது ஆளுநராக 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான மஹிந்த ஆட்சி காலத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருத்தாளரா வீழ்ச்சி மிக மோசமாக உள்ள நிலையில் மத்திய வங்கியின் செயற்பாடுகள் முக்கியமானவை. இந்த நிலையில் தற்போதைய அரசுக்கு நெருக்கமான ஒருவர் அந்த பதவிக்கு வருவது நாட்டுக்கு சாதக இருக்குமா இல்லையா என்பது அவரது எதிர்கால நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. இருப்பினும் அஜித் நிவாட் கப்ரால் பெயர் பெற்ற இலங்கை மத்திய வங்கி ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி ஆளுனராக மீண்டும் அஜித் நிவாட் கப்ரால்

Social Share

Leave a Reply