புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று (22/12) நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

அதற்கமைய நாளை (24/12) முதல் பயணச்சீட்டு வழங்குவதைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினா் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

Social Share

Leave a Reply