அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்கலனகளில் அரிசி, சீனி, பருப்பு, கடலை, வெள்ளைப்பூடு உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசிய பொருட்கள் அடங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
அதனை விடுவிப்பதற்குத் தேவையான டொலரை வழங்குமாறு மத்திய வங்கியிடம் தற்போது கோரியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.