இந்திய – தமிழக மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட செலயகத்திற்கு முன்னால் ஏ9 வீதியை மறித்து மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தே, யாழ்ப்பாணம் மவாட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட மேலும் பல மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.
இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைந்து, மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டமானது, யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.