இலங்கை மின்சார சபையினால் தினமும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை மின்சாரசபை மின்வெட்டு எந்த பகுதிகளில், எந்த வேளைகளில் இடம்பெறும் என்பது தொடர்பிலான அட்டவணை ஒன்றை இன்று (10.01) வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சகல பாகங்களும் உள்ளடங்கலாக இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியிலான அட்டவணையினை கீழே பார்வையிடலாம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மின்தடையினை முடியுமானளவு தடுத்து, மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதனை தடுக்குமாறு மின்சாரசபைக்கு இன்று அறிவித்தல் வழங்கியுள்ளார்.
