வவுனியா கொரனோ கண்காணிப்பு கூட்டம்

வவுனியாவில் கொரோனா கண்காணிப்பு கூட்டம் வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலகத்தினர், சுகாதர பிரிவினர், பிரதேச செயலாளர்கள், பொலிசார், இராணுவத்தினர் கலந்து கொண்டுள்ளனர். உள்ளுராட்சி சபையினர்  இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.

சுகாதர துறையினர் மிகவும் சிறப்பாக செயற்படுகிறனனர். ஆனால் ஆளணி பற்றாக்குறை அவர்களுக்குரிய சிக்கலாக காணப்படுவதுடன் தொடர்பாடல்களை   மேற்கொள்ளவதிலும், இணைப்புகளை ஏற்படுத்துவதிலும் சிக்கல் நிலை காணப்படுகிறது.

அதனை நிவர்த்தி செய்யவேணுடுமென மாவட்ட செயலாளர் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மாவட்ட  செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் இதற்கு சுகாதர துறையினருக்கு உதவி செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். 

வவுனியா மாவட்ட சுகாதார திணைக்களத்திற்கு உதவிகள் பல கிடைக்க பெற்றுள்ளன. மத்திய அரசின் மூலம் ஏராளமான உதவிகள் கிடைத்துள்ளன. வவுனியா மாவட்ட சுகாதார பணிமனை  பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டு,  வவுனியா மாவட்ட சுகாதார பணிமனையின்  திட்டமிடல் பிரிவின் வேலைத்திட்டங்கள் மூலம் பாரியளவிலான உதவிகள் கிடைத்தன.

அதேபோன்று  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ராகுலனின் இணைப்பின் மூலமும், வேலைத்திட்டங்கள் மூலமும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல உதவிகள் கிடைத்துள்ளன.

அரச தனியார் உதவிகளாக இவை அமைந்துள்ளன. தனி நபர்களாக செய்த உதவிகள் பல கிடைத்தன. அதே போன்று வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் சுஜேன் மற்றும் அம்பிகைபாலன் ஆகியோர் மூலமும், ஒமேகா கார்மண்ட்ஸ், சாய் சமூர்த்தி, மனதுருக்கம் இலங்கை  போன்ற அமைப்புகளின் உதவிகள் பெரிதும் குறிப்பிடத்தக்கவை எனவும் தகவல்கள் பகிரப்பட்டன.

வீதிகளில் தேவையின்றி திரியும் மக்கள் தொடர்பில்  கவலையினை வெளியிடடனர். ஏன் அவர்கள் வெளியே வருகிறார்கள் என்பதும், யார் என்பதும் தெரியவில்லை எனவும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாகவும் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் செனவிரத்ன தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பிழையான தகவல்களை பகிருவது தேவையற்ற குழப்பங்களை மக்கள் ஏற்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான குழப்பங்களை மக்கள் ஏற்படுத்தாமல், தவறான செய்திகளை வெளியிடுவதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினர்.

இராணுவத்தினர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் சிறப்பாக பங்களித்து வருவதாகவும், அவர்களுது சுகாதர துறை சார்ந்தவர்களது பங்களிப்பு செய்து வருவதாகவும் சுகாதர துறையினர் தெரிவித்தனர்.

சுகாதாரா துறையினர்  மிகவும் சிறப்பாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருவதாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சுகாதர துறை தொடர்பில் தங்களது கருத்துக்களை குறித்த கூட்டத்தில் முன் வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்ப்பாகவும்,அதன் புள்ளி விபரங்களும் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

அதனடிப்படையில் தற்போதைய ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் வவுனியாவின் தொற்று நிலவரம், மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிந்தது.

தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்ளாத 80% ஆனவர்கள் இறக்கின்றனர் என்பதும் குறித்த கூட்டத்தில் சுகாதர தரப்பினர் சுட்டிக்காட்டியதோடு, தடுப்பூசிகள் ஏற்றப்படுவதனை ஊக்குவிக்க வேண்டுமெனவும் சுககாதார துறையினர் சுட்டிக்காட்டினர்.

வவுனியா கொரனோ கண்காணிப்பு கூட்டம்

Social Share

Leave a Reply