எரிவாயு விவகாரம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு, கொள்கலன், குழாய் மற்றும் ரெகுலேட்டர்களை தரப்படுத்துவதற்கு இலங்கை தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு (SLSI) அதிகாரமளித்தே இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சரின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது.
