இந்திய திரையுலக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, தன்னுடன் அண்மை காலமாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
