கலஹாவில் உள்ள லுல்கதுர பகுதியில் இருந்து பாராசூட்டில் பயணித்த 35 வயதான ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் ரலிமாங்கொடையில் தரையில் மோதி காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (12/01) தரையிறங்கும் போது 30 அடி உயரமான மரத்தில் பாரசூட் சிக்கியதில் தரையில் விழுந்ததாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வெளிநாட்டவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கலஹா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
