சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்திருந்த பானுக ராஜபக்ஷ அதனை மீள பெற்றுக் கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பானுக ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றினை அண்மையில் கையளித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு விளையாடுவதற்கான வயதெல்லை இன்னும் இருப்பதாக தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அக்கடிதத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பானுக ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து பானுக ராஜபக்ஷ, தான் கையளித்திருந்த கடிதத்தை மீள பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.
