தமிழகத்தின் இளைஞர்களால் அரசியல் ரீதியாகவும், சினிமா மூலமும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந். கடந்த சில வருடங்களாக சுகயீனம், கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் வெளியே நடமாடுவதை தவிர்த்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந், கடந்தவாரம் வைத்தியசாலையில் உடல் நலம் பெற்று தொலைபேசியில் தனது திரைப்படமொன்றை பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
சினிமா வட்டாரத்தில் மாத்திரமின்றி சொந்த வாழ்க்கையிலும் தன்னைச் சுற்றியுள்ளோரது நலனில் அக்கறை கொண்டவராக பலருக்கு உதவி செய்துவரும் நபர் எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் நலம் பெறும் பொருட்டு பிரார்த்திப்பதாக பதிவிட்டுவந்தனர்.
அந்த வகையில் தற்போது உடல் நலம் தேறியுள்ள விஜயகாந், தமிழகத்தின் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சியான தே.மு.தி.க தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் உருவாக்கப்பட்டள்ள காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நெல்லை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் நடாத்தி முடிக்கப்படல் வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்ததற்கமையவே தே.மு.தி.க தலைவர் விஜயகாந் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை விண்ணப்பிக்கக் கோரியுள்ளார்.