நெருக்கமாக பழகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தன்னைத்தானே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரஷ்ய ஜனாதிபதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவர் தன்னைத்தானே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். அவருக்க ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளும் அவருக்கு ஏற்றப்பட்டுள்ளது அத்துடன் அவரது உடல் நிலை பூரண ஆரோக்கியமாக உள்ளது. அவர் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் தினமும் பதினையாயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று பரா ஒலிம்பிக் வீரர்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இத் தீர்மானத்தை தெரிவித்துள்ளதாகவும், அவ்வாறெனில் அவர் எதற்காக குறிந்த நிகழ்வில் கலந்து கொண்டார் எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு கிரெம்லினின் ஊடகப் பேச்சாளர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே ஜனாதிபதி குறித்த நிகழ்வில் கலந்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளது.