இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்தார். ஐஸ்வர்யாவும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரியவில்லை என்றும் நட்பு ரீதியான முறையில் தனித்தனியாக தமது வாழ்க்கையை கொண்டு செல்லவே தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் ஒருமுறையும் இருவரும் பிரிவதற்கான தீர்மானம் மேற்கொண்டு, சிறிது காலம் தனியாக இருந்து பின்னர் ஒன்று சேர்ந்திருந்தனர். இதுபோலவே இம்முறையும் இருவரும் சிறிது காலம் தனியாக இருந்து தமது பயணங்களை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக இந்திய சினிமா தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலமாக தனுஷ் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகிகளுடன் நெருங்கி பழகியதை அவரது மனைவி ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் அதனால் தான் அவர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சமீபத்தில் ‘மில்க்’ நடிகை ஒருவருடன் தனுஷ் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசு வெளியாகியிருந்த நிலையில், அந்த நடிகையின் வீட்டிலேயே அவர் எப்போதும் தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கேரள முன்னணி நடிகை ஒருவர் ஒருவருடனும் தனுஷ் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு பரவியது.
அந்த நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து தனுஷ் தனக்கு தொல்லை கொடுப்பதாக புகார் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தனுஷ் – ஐஸ்வர்யா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கு இதுவே காரணம் எனவும் பேசப்படுகிறது.
இவ்வாறான தகவல்கள் வெளியாகியிருந்தாலும் அவர்களது பிரிவு நிரந்தரமில்லை என்ற நிலைப்பாடும் காணப்படுகிறது.
