முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதனை அவரே முடிவெடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார். அவர் இலங்கையில் வாழ முழு உரிமையும் கொண்டுள்ளார். இந்த நாட்டு பிரஜையாக அவர் விரும்பிய முடிவினை எடுக்கலாம். இது ஒரு ஜனநாயக நாடு என மேலும் நாமல் கூறியுள்ளார்.
முடிவுகளை அவரே எடுக்க வேண்டுமெனவும், அதில் வேறு யாரும் தலைப்போட முடியாதெனவும் கூறியுள்ள நாமல், அவர் முடிவு எடுத்ததும் கட்சியின் உயர் பீடத்துக்கு அறிவிப்பார் எனவும் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.