ஏனைய நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்களில் பதிவாகும் விலங்கு இறப்புகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் விலங்குகளின் இறப்பு விகிதம் ஒரு சதவீதமாக மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய விலங்கியல் பூங்காவால் நிர்வகிக்கப்படும் உயிரியல் பூங்காக்களில் சுமார் 3,485 விலங்குகள் உள்ளன. அவற்றில் 38 விலங்குகள் கடந்த ஆறு மாதங்களில் இறந்துபோயின. இது மொத்தத்தில் ஒரு சதவீதமாகும். அதேசமயம் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் பிறப்பு சதவீதம் இரண்டாக பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய விலங்கியல் பூங்காவில் சிறந்த கால்நடை நிபுணர்கள் பணியாற்றி வருவதால், எமது உள்நாட்டு விலங்குகளின் இறப்பு வீதம் குறைந்த அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.