கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கர்ப்பிணிகள் பொதுசனம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2 – 3 வாரங்களில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இரண்டாவது தடுப்பூசி போட்டு 3 மாதங்கள் ஆகும் தாய்மார்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவது அவசியம் என மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான பேராசிரியர் சனத் லான்ரோல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.